தமிழக வருகையை மறக்கமுடியாது: சீன அதிபர் ஜின் பிங்

தமிழக வருகையையும், சிறப்பான விருந்தோம்பலையும் என்னாலும், சக சீன அதிகாரிகளாலும் மறக்க முடியாது என சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
 | 

தமிழக வருகையை மறக்கமுடியாது: சீன அதிபர் ஜின் பிங்

தமிழக வருகையையும், சிறப்பான விருந்தோம்பலையும் என்னாலும், சக சீன அதிகாரிகளாலும் மறக்க முடியாது என சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். 

சென்னை வருகை தந்துள்ள சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிகாரிகளுடன் கோவளம் ஹோட்டலில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய சீன அதிபர், " தமிழக வருகையை என்னால் மறக்க முடியாது. தமிழகத்தின் சிறப்பான விருந்தோம்பலை நானும், சக அதிகாரிகளும் நன்றாக உணர்ந்துள்ளோம். இந்தியர்களின் வரவேற்பு மனதில் நிலைத்து நிற்கும் வகையில் உள்ளது. என்னாலும், சீன அதிகாரிகளாலும் மாமல்லபுரம் வருகையை மறக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடியும், நானும் நண்பர்கள் போன்று இருநாட்டு உறவுகள் குறித்து மனம்விட்டு பேசுயுள்ளோம்" என கூறினார்.  

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP