சீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை 

சீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

சீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை 

சீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சுங்கத்துறை, ‘சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். சீனப் பட்டாசுகளை பயன்படுத்துவது வெடிப்பொருட்கள் சட்டத்திற்கு எதிரானது. சீனப் பட்டாசுகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் உள்ளன. அந்த பட்டாசுகளை வாங்குவது உள்நாட்டு தொழில் மற்றும் வணிகத்தை பாதிக்கும். எனவே பொதுமக்கள் சீனப் பட்டாசுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சீனப்பட்டாசு விற்பனை செய்யப்பட்டால் 044-25246800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று மத்திய சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP