மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க மீண்டும் முட்டுக்கட்டை போட்ட சீனா

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா.வில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
 | 

முன்னதாக, இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மசூத் அசாரை, ஐ.நா.வின் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கான தீர்மானத்தை பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் கொண்டு வந்தன. அந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டால், மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி என அறிவிக்கப்படுவார். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வீட்டோ அதிகாரம் கொண்டவை. அதாவது, ஐ.நா.வில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு, இதில் ஏதேனும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் கூட அத்தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படும்.

இதற்கு, மசூத் அசாருக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு சமயத்திலும் சீனா மட்டும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த முயற்சியை தோல்வியடைய வைத்தது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகளும், வீட்டோ நாடுகளும் தங்கள் கருத்தை தெரிவிப்பதற்கான கால அவகாசம் நேற்று நள்ளிரவு வரையில் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடைசி நிமிடத்தில் தீர்மானத்தை ஆராய்வதற்கு தங்களுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக சீனா கூறிவிட்டது. இதையடுத்து, தீர்மானத்தை பரிசீலிக்க மேலும் 6 மாத காலம் வழங்கப்படும். அதுவரையில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முடியாது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP