21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்!

வாக்கு எண்ணிக்கையின் போது, 100% விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை, வாக்குப்பதிவு இயந்திரங்களோடு ஒப்பிட வேண்டுமென 21 எதிர்க்கட்சிகள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
 | 

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே23) நடைபெறவுள்ளது. இதில், வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்பிட, 50% விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கடந்த மே 7ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, 100% விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கும் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 

21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்!

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் நேற்று தேர்தல் ஆணையத்தை நாடி, 100% விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும்; விவிபேட் மற்றும் இவிஎம் மெஷின்களில் பதிவான வாக்குகளில் வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தன. 

இந்நிலையில் 21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. 100% விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ணுவது என்பது சாத்தியமானது அல்ல என்றும் விவிபேட் மற்றும் இவிஎம் மெஷின்களில் பதிவான வாக்குகளில் வித்தியாசம் இருந்தால் விவிபேட் இயந்திரத்தில் உள்ள வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் பதில் அளித்துள்ளது. 

21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்!

எனவே முன்னதாக அறிவித்தபடி, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 5 வாக்குச் சாவடிகளில் உள்ள விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகள்,  இவிஎம் மெஷின்களில் பதிவான வாக்குகளோடு ஒப்பிடப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP