சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் - முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் 8 மாவட்டங்களை உள்ளடக்கிய 18 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளாகும். இங்கு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் வழக்கம்போல் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 | 

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் - முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையில், முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு நடத்தப்படும் தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 72 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல், வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது.

முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் 8 மாவட்டங்களை உள்ளடக்கிய 18 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளாகும். இங்கு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் வழக்கம்போல் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, கடந்த நாள்களில் 6,7 தாக்குதல்களை அவர்கள் நடத்தியுள்ளனர். அதிலும் பத்திரிகையாளர் உள்பட 13 பேர் பலியான தாக்குதல் மிகவும் மோசமான ஒன்றாகும்.

மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையிலும், தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தி முடிக்கும் வகையிலும் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை சிறப்பு இயக்குநர் அவாஸ்தி தெரிவித்தார்.

முதல்கட்டத் தேர்தலில் மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 31.80 வாக்காளர்கள் இருக்கின்றனர். மாநிலத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவும் அதே சமயம், முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகி தலைமையிலான கூட்டணி மூன்றாவது அணியாக களமிறங்கியுள்ளது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP