சந்திரயான்- 2 பயணம்: அந்த திக் திக் 15 நிமிடங்களில் நடந்தது என்ன?

நிலவின் தென்துருவம் குறித்து ஆராய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது .
 | 

சந்திரயான்- 2 பயணம்: அந்த திக் திக் 15 நிமிடங்களில் நடந்தது என்ன?

நிலவின் தென்துருவம் குறித்து ஆராய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 23 நாட்கள் பயணித்து கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி ஆர்பிட்டரிலிருந்து பிரிந்து லேண்டர் விக்ரம் நிலவின் தென்பகுதியில் தரை இறங்கத் தயாரானது .

கடைசி 15 நிமிடங்கள் மிகவும் பதற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் 10 நிமிடங்கள் மிகவும் சரியாக திட்டமிட்ட பாதையில் பயணித்தது. நிலவுக்கு மேலே 2.1 கிலோ மீட்டர் தூரத்தில் லேண்டர் விக்ரம் இருக்கும் போது, அதற்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டர் விக்ரமில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ அறிவித்தது.

இருந்தபோதிலும், விக்ரமுடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அந்த 15 நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து விஞ்ஞானிகள் கூறிய தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரயான்- 2 பயணம்: அந்த திக் திக் 15 நிமிடங்களில் நடந்தது என்ன?

அதாவது, அந்த 15 நிமிடங்களில் முதல் 10 நிமிடங்கள் லேண்டர் விக்ரம் சரியான வேகத்தில் நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது. 11வது நிமிடம் முதல் 12ம் நிமிடத்தில் தான் திட்டமிடலுக்கு மாறாக நடந்துள்ளது. 

நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் போது ,லேண்டர் விக்ரம் சற்று சுழன்று அதன் பின்னர் சந்திரனின் மேற்பரப்பில் தரை இறங்குவதுதான் திட்டம். ஆனால், இந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக லேண்டர் விக்ரம் தலைகீழாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியதாக  கூறப்படுகிறது. 11  நிமிடங்கள் 28 விநாடிகளில் லேண்டர் விக்ரமின் செங்குத்து வேகமானது, வினாடிக்கு 42.9 மீட்டராக இருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராதவிதமாக சிறிது வினாடிகளில் 58.5 மீட்டர் ஆக இது அதிகரித்தது.

எஞ்சின் ஆனது லேண்டர் விக்ரமை சந்திர மேற்பரப்பை நோக்கி வேகமாக உந்தியுள்ளது. இதனால், லேண்டர் விக்ரம் தரை இறங்குவது திட்டமிடுதலும் மாறாக பிரச்சனையை சந்தித்துள்ளது.  பின்னர் கிடைத்த தகவலில், லேண்டர் விக்ரம் சாய்ந்த நிலையில் இருப்பதாக தகவல் உள்ளது. லேண்டரின் உள்ளே இருந்த ரோவரின் நிலை என்னவென்று தெரியவில்லை. 

சந்திரயான்- 2 பயணம்: அந்த திக் திக் 15 நிமிடங்களில் நடந்தது என்ன?

இந்த சூழ்நிலையில், லேண்டரை கண்டுபிடிக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான,  நாசா இந்தியாவிற்கு உதவி செய்வதாக அறிவித்து நேற்று முதல் இதற்கான பணியை தொடங்கி உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு நாசா நிலவுக்கு அனுப்பிய ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருகிறது. அடுத்த சில தினங்களில் நாசாவின் இந்த ஆர்பிட்டரானது, லேண்டர் விக்ரம் இருக்கும் பகுதிக்கு செல்ல இருப்பதால் லேண்டர் குறித்த புகைப்படங்களை எடுத்து நாசாவிற்கு அனுப்பும்.

நாசா எடுத்த புகைப்படங்கள் இஸ்ரோவிற்கு அனுப்பப்பட்ட பின்னர், இந்த புகைப்படங்களை வைத்து லேண்டரின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். லேண்டர் விக்ரம் 14 நாட்கள் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். ஏற்கனவே 7 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் 7 நாட்களுக்குள் லேண்டரிடம் இருந்து சிக்னல் கிடைக்க வேண்டும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP