சந்திராயன்2: விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு!

சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இருக்கும் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
 | 

சந்திராயன்2: விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு!

சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இருக்கும் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை அனுப்பியது. நேற்றய தினம் முக்கிய நிகழ்வான சந்திராயன் 2 லேண்டர் தரையிறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, நிலவின் அருகில் 2.1 கி.மீ தொலைவில் சென்றநிலையில் விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மேற்கொண்டு நிலவை ஆய்வு செய்யும் முயற்சி பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், விக்ரம் லேண்டர் இருக்கும் இருப்பிடத்தை நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் தகவல் தொடர்பு கிடைக்கவில்லை எனவும், லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

செங்குத்தான நிலையில் லேண்டர் விழுந்திருந்தால் ஆய்வுகளை தொடர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP