சந்திராயன் - 2 : பெண்களின் பெருமையை நிலவுக்கே கொண்டு செல்லும் இரு மாதர்கள்!

சந்திராயன் -2 விண்கலம் மற்றும் அதன் எஞ்சின் உள்ளிட்ட அனைத்தும் நம் நாட்டின் சொந்த தயாரிப்பு என்பது இதன் சிறப்பு என்றால், இதற்கு மற்றொரு சிறப்பும் உள்ளது. சந்திராயன் -2 திட்ட இயக்குநர்கள் இருவருமே பெண்கள் என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.
 | 

சந்திராயன் - 2 : பெண்களின் பெருமையை நிலவுக்கே கொண்டு செல்லும் இரு மாதர்கள்!

நிலவின் தென்துருவத்தை ஆராய, நாளை அதிகாலை விண்ணில் ஏவப்படவுள்ளது சந்திராயன் -2 விண்கலம். இந்த விண்கலம் மற்றும் அதன்  எஞ்சின் உள்ளிட்ட அனைத்தும் நம்  நாட்டின் சொந்த தயாரிப்பு என்பது சந்திராயனின் சிறப்பு என்றால், இதற்கு மற்றொரு சிறப்பும் உள்ளது. சந்திராயன் -2 திட்ட இயக்குநர்கள் இருவருமே பெண்கள் என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.

சந்திராயன் -2 திட்ட இயக்குநராக செயல்பட்டு வரும் முத்தையா வனிதா, பணி இயக்குநராக இயங்கி வரும் ரிது கரிதாள் ஆகிய இருவரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய விண்வெளி ஆய்வு நி்றுவனத்தில் (இஸ்ரோ) பணிபுரிந்து வருகின்றனர். இத்துடன், 2013-இல் செயல்படுத்தப்பட்ட "மங்கள்யான்" திட்டத்திலும் இருவரும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

மின்னணு பொறியாளரான முத்தையா வனிதா, 2006- இல் சிறந்த பெண் விஞ்ஞானிக்கான "அஸ்ட்ரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா"வின் விருதை பெற்றுள்ளார். கார்டோசாட் -1, ஓசன்சாட் -2 உள்ளிட்ட இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களில் துணைத் திட்ட இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து வரும் பெண்கள், இஸ்ரோவின் வரலாற்றில் முதன்முறையாக, அதன் பிரத்யேக விண்வெளி ஆய்வு திட்டம் ஒன்றுக்கு தலைமை வகிப்பதன் மூலம்,  முத்தையா வனிதாவும், ரிது கரிதாளும் பெண் இனத்தின் பெருமையை நிலவுக்கே கொண்டு செல்ல உள்ளனர் என்றால் அது மிகையாது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP