விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்!

நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
 | 

விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்!

நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக சந்திரயான் -1 விண்கல சோதனை வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்வதற்காக சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டு இன்று வெற்றிகரமாகவும் விண்ணில் செலுத்தப்பட்டது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் உதவியுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்!

முன்னதாக, சந்திரயான் -2 விண்கலத்தை, கடந்த திங்கள்கிழமை (ஜூலை 15) அதிகாலை 2:51 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கவுண்ட் டவுன் தொடங்கப்பட்ட பின்பு, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இறுதி நேரத்தில் விண்கலம் செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்தே இஸ்ரோவின் அறிவிப்பின்படி, விண்கலம் இன்று(ஜூலை 22) பிற்பகல் 2:43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 

சந்திரயான் -2 விண்கலத்தின் எடை 3850 கிலோ. சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடைய உள்ளது. மணிக்கு 6,000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 45 முதல் 60 நாட்களில் நிலவின் தென்துருவ பகுதியை அடையும். தோராயமாக செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும். ஆர்பிட்டர், லேண்டர்(விக்ரம்) மற்றும் ரோவர் (ப்ரக்யான்) என இந்த விண்கலம் மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. பல்வேறு விதமான லேசர் கருவிகளையும் உள்ளடக்கியது.

விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்!

சுமார்  4000 கிலோ அளவிலான எரிபொருளை கொண்டு செல்கிறது. இந்தியாவின் 13 பேலட்கள் மற்றும் நாசாவின் ஆராய்ச்சிக்காக 1 பேலட் என 14 பேலட்களுடன் விண்கலம் பயணம் செய்கிறது. சந்திராயன் - 2 விண்கலத்தை உருவாக்க ஆன செலவு ரூ.978 கோடி ஆகும். இதன் ஆயுட்காலம் 1 ஆண்டுகள்.

இன்று செலுத்தப்பட்டுள்ள சந்திரயான்- 2 விண்கலம் வருகிற செப்டம்பர் மாதம் நிலவில் 'ஸாப்ட் லேண்டிங்' முறையில் தரையிரங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்வெளி சாதனையில் இந்தியாவின் அடுத்த மைல்கல்லாக சந்திரயான் -2 விண்கலம் இருக்கும் என்பதே இந்திய அறிவியலாளர்கள் அனைவரின் கருத்தாக இருக்கிறது. 

newstm.in

பாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP