சந்திராயன் 2 - ஒத்தி வைப்பு!

ஏவுகணையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
 | 

சந்திராயன் 2 - ஒத்தி வைப்பு!

ஏவுகணையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

உலக நாடுகளிலேயே முதல் முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக, இஸ்ரோ உருவாக்கியுள்ள சந்திராயன் -2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு அதற்கான கவுன்ட்டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட ஆயிரக்கணக்கானோர் இதனை காண கூடியிருந்தனர். இந்நிலையில்  விண்ணில் செலுத்துவதற்கு 56 நிமிடங்கள் 24 வினாடிகள் முன்பு ஏவுகணையில் ஏற்பட்டிருந்த கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு கவுன்ட்டவுன் நிறுத்தப்பட்டது.

கடைசி நேரத்தில் கோளாறு ஏற்பட்டதால், சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கோளாறுகள் குறித்து ஆய்வு செய்த இஸ்ரோ, சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP