சந்திரயான்2: ஆர்பிட்டரின் சுற்றுவட்டப் பாதையை குறைக்க திட்டம்

சந்திரயான்2 விண்கலத்தின் ஆர்பிட்டர் சுற்றுவட்டப் பாதையை குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
 | 

சந்திரயான்2: ஆர்பிட்டரின் சுற்றுவட்டப் பாதையை குறைக்க திட்டம்

சந்திரயான்2 விண்கலத்தின் ஆர்பிட்டர் சுற்றுவட்டப் பாதையை குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணிற்கு அனுப்பியது. பல்வேறு கட்டங்களை தாண்டி நிலவை நெருங்கிய சந்திரயான் 2விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 7ஆம் தேதி நிலவில் தரையிறக்கியபோது, தகவல் தொடர்பை இழந்தது. நேற்றைய தினம் விக்ரம் லேண்டரை நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளது. 

இந்நிலையில், ஆர்பிட்டரின் சுற்றுவட்டப்பாதையை குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. தற்போது நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிவரும் ஆர்பிட்டரை 50 கிலோ மீட்டர் அருகில் கொண்டு சென்று லேண்டரின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP