நிலவின் 3வது வட்டப்பாதையில் சந்திராயன்2

சந்திராயன் 2 விண்கலம் நிலவின் 3வது சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக திசைத்திருப்பப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 | 

நிலவின் 3வது வட்டப்பாதையில் சந்திராயன்2

சந்திராயன் 2 விண்கலம் நிலவின் 3வது சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக திசைத்திருப்பப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது. பல கட்ட பாதைகளை கடந்த இந்த சந்திராயன் 2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கவுள்ளது. 

விண்வெளியை அடைந்த சந்திராயன் 2 முதற்கட்டமாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு வெற்றிகரமாக இயக்கப்பட்டது. நிலவின் சுற்றுவட்டபாதையில் 3 முறை திசைமாற்றம் செய்யப்பட்டு நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இன்று காலை 9.04 மணியளவில், நிலவின் 3வது சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக திசைத்திருப்பப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP