மத்திய அமைச்சர்கள் நிர்மலா, ஜெய்சங்கருக்கு சிறப்பு விருது: ஜே.என்.யு., ஒப்புதல் 

மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோருக்கு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் சார்பில், சிறந்த முன்னாள் மாணவர் விருது வழங்க பல்கலை செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 | 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர், தமிழக பூர்வீகத்தை உடையவர்கள். தவிர, இவர்கள் இருவருமே, டெல்லியில் உள்ள பிரபல ஜவஹர்லால் நேரு பல்கலையின் முன்னாள் மாணவர்கள். 

இந்த பல்கலையில் பயின்ற மாணவர்களான இருவரும், நாட்டின் உயரிய அமைச்சகங்களை தலைமையேற்கும் அளவுக்கு உயர்ந்துள்ளதை அடுத்து, அவர்களை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்க பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
இதற்கு, பல்கலை செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதை அடுத்து, மத்திய அமைச்சர்கள் இருவருக்கும், மிகச் சிறந்த முன்னாள் மாணவர்கள் என்ற விருது விரைவில் வழங்கப்பட உள்ளது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP