போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

தற்போதுள்ள 'இந்திய மருத்துவக் கழகம் ' என்பதற்கு பதிலாக 'தேசிய மருத்துவ ஆணையம்' என்பதை உருவாக்கும் பொருட்டு இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மருத்துவ நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வு மற்றும் மேற்படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே தேர்வாக 'நெக்ஸ்ட்' எனப்படும் தேர்வை நடத்துவது உள்ளிட்ட விதிமுறைகள் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

விரைவில் இது சட்டமாக வரவுள்ள நிலையில், இந்த தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை அடுத்து, மத்திய அரசு போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், தொடர்ந்து போராட்டம் நடத்தினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP