அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை!!!

மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலின் டெல்லி மற்றும் பெங்களூர் கிளைகளில், நேற்று சோதனையில் ஈடுபட்டனர் மத்திய விசாரணை பணியக அதிகாரிகள்.
 | 

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை!!!

மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் டெல்லி மற்றும் பெங்களூர் கிளைகளில், நேற்று சோதனையில் ஈடுபட்டனர் மத்திய விசாரணை பணியக அதிகாரிகள்.

சர்வதேச அளவில் மனித உரிமை அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை கவனித்து வரும் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் டெல்லி மற்றும் பெங்களூர் கிளைகளில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை சோதனையில் ஈடுபட்டிருந்தனர் சி.பி.ஐ அதிகாரிகள்.

அயல்நாட்டு பணம்பெறுதல் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பாக, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் முறைகேடு செய்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்து, தற்போது மத்திய விசாரணை பணியக அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இதை தொடர்ந்து, அதிகாரிகளின் சோதனையின் முடிவாக, அயல்நாட்டு பணம்பெறுதல் ஒழுங்குமுறை சட்டத்திற்கு எதிராக பல செயல்களில் இவ்வமைப்பு ஈடுபட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP