பீகார் காப்பகத்தில் 11 சிறுமிகள் கொன்று புதைப்பு: சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பீகார் மாநில காப்பகத்தில் தங்கியிருந்த 11 சிறுமிகள், காப்பக நிர்வாகத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
 | 

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு தங்கியிருந்த, 11 சிறுமிகள் கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. பின்னர், இது தொடர்பாக காப்பகத்தை கவனித்து வந்த ராஜேஷ் தாகூர் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. தற்போது இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில்,  ராஜேஷ் தாகூர் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து, காப்பகத்தில் உள்ள 11 சிறுமிகளை கொன்றது தெரிய வந்துள்ளது. காப்பக வளாகத்தில் சிறுமியரின் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், இந்த தகவலை சிபிஐ அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கினை முழுமையாக விசாரித்து நான்கு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP