வங்கியில் முறைகேடு: ம.பி முதல்வரின் உறவினர் கைது; வங்கிக்கணக்குகள் முடக்கம்!

வங்கியில் பல கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத விவகாரத்தில் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் உறவினர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் கமல் நாத்தின் உறவினரான ரதுல் புரி என்பவர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இவர் பல்வேறு வங்கிகளில் பல கோடி ரூபாய் கணக்கில் கடன் வாங்கியுள்ளார். ஆனால், இந்த வங்கிக் கடன்களை அவர் திருப்பி செலுத்த முன்வரவில்லை. 

வங்கியில் முறைகேடு: ம.பி முதல்வரின் உறவினர் கைது; வங்கிக்கணக்குகள் முடக்கம்!

அதிகபட்சமாக, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் 354 கோடி ரூபாயை கடனாக பெற்று, அதனை திருப்பி செலுத்தவில்லை. மேலும், கடன் வாங்குவதற்கு அவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் ரதுல் புரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. அதேபோன்று அமலாக்கத் துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது . இந்நிலையில் இன்று ரதுல் புரியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் அவர் முறைகேடு செய்தது உறுதியானதை அடுத்து, ரதுல் புரியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரது வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. 

இந்த செய்து முதலமைச்சர் கமல் நாத் மற்றும் அவரது உறவினர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP