டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்!

மாதந்தோறும் நடைபெறும் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில அரசுகளின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
 | 

டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்!

நடப்பு மாதத்திற்கான காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிதிகள் பங்கேற்க உள்ளனர். 

கடந்த ஜூன் 24ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் முன்னதாக உத்தரவிட்டபடி, காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டது. 

இதையடுத்து, கர்நாடக அணைகளில் தற்போதைய நீர் இருப்பு அளவு மற்றும் நடப்பு மாதத்திற்கான நீர் பங்கீடு தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தில் இன்று பிற்பகல் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP