சென்னை - ரஷ்யா இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து!

இந்தியா - ரஷ்யா இடையே புதிய வழித்தட சரக்கு கப்பல் போக்குவரத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
 | 

சென்னை - ரஷ்யா இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து!

இந்தியா - ரஷ்யா இடையே புதிய வழித்தட சரக்கு கப்பல் போக்குவரத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ளதால் ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, விளாடி வாஸ்டாக் அருகே உள்ள மிகப்பெரிய கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார். 

இதை தொடர்ந்து விளாடிவாஸ்டாக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  இந்தியா - ரஷ்யா இடையேயான புதிய சரக்கு கப்பல் போக்குவரத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் கையெழுத்தானது. ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக்கில் இருந்து புதிய வழிதடத்தில் சரக்கு கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய் 19 நாட்களில் சென்னையை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP