சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மோதிய கார்; டெல்லி மாணவன் கைது

சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மோதிய கார்; டெல்லி மாணவன் கைது
 | 

சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மோதிய கார்; டெல்லி மாணவன் கைது


டெல்லியில், பிஎம்டபிள்யு காரில் சென்ற மாணவன் மோதியதில், சம்பவ இடத்திலேயே முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

டெல்லி யூனிவர்சிட்டியில் யுஜி முதலாம் ஆண்டு பயிலும் அபினவ் சாஹ்னி(21), சம்பவத்தன்று கல்சா கல்லூரியில் இருந்து கிரோரி மால் என்ற கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தான். வேகமாக வந்து கொண்டிருந்த சாஹ்னியின் கார், சாலையை ஓடி கடக்க முயன்ற 50 வயதான ஷிவ் நாத் மீது மோதி, அவரை தூக்கி அடித்து வீசப்பட்டுள்ளது. இதனால், சம்பவ இடத்திலேயே, ஷிவ் நாத் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய சாஹ்னி, அங்கிருந்து சென்றுவிட்டார். 

இந்த காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து வழக்கை விசாரித்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ சாட்சியை வைத்து, விபத்து நடந்த மறுநாள் சாஹ்னியை கைது செய்தனர். பின்னர், சாஹ்னி ஜாமீனில் வெளியே வந்தார். விபத்து நடந்ததும் பயத்தில் அந்த இடத்தை விட்டு வந்துவிட்டதாக சாஹ்னி தெரிவித்திருந்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP