உயிரிழந்த பிரியங்கா ரெட்டிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி !!

தெலுங்கானாவில் பிரியா ரெட்டியை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி, ஏபிவிபி சார்பாக அவரது படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 | 

உயிரிழந்த பிரியங்கா ரெட்டிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி !!

தெலுங்கானாவில் பிரியங்கா ரெட்டியை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி, ஏபிவிபி சார்பாக அவரது படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தவர் 27 வயது பெண் பிரியங்கா ரெட்டி. கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பணி முடிந்து பிரியங்கா ரெட்டி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி அருகே இருசக்கர வாகனம் பழுதானது.

அப்போது பிரியங்கா ரெட்டிக்கு உதவுவது போல நடித்து பாலியல் கூட்டுவன்கொடுமைக்கு உட்படுத்திய இளைஞர்கள், அவரை கொடூரமான முறையில் கொலையும் செய்தனர். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் வாங்கி வந்த அந்த இளைஞர்கள், பிரியங்கா ரெட்டியின் உடலை எரித்து விட்டனர். இதன் பிறகு இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்ட போலீசார், குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்தனர்.

இந்த கொடூர செயலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் ஏபி விபி சார்பாக பிரியா ரெட்டியின் படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும், இது போன்ற கொடூரமான ஆட்களினால், இனி வரும் காலங்களில் பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஏபி விபி சார்பாக தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் சுப்ரஜா தெரிவித்தார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP