காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து; விவசாயிகளுக்கு ஓய்வூதியம்: பாஜக தேர்தல் அறிக்கை!

2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தமது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
 | 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து; விவசாயிகளுக்கு ஓய்வூதியம்: பாஜக தேர்தல் அறிக்கை!

2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தமது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. 

டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முதலில் பேசி, நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். தொடர்நது, 'உறுதிமொழி பத்திரம்' என்ற பெயரில் பாஜக-வின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா வெளியிட்டனர். 

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: -

►  கிசான் சமமான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

►  தூய்மை இந்தியா திட்டத்தில் 100% தூய்மை எட்டப்படும். 

►  அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

►  யோகாவை உலக அளவில் கொண்டு செல்ல மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

►  நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2022-க்குள் இரட்டிப்பாக்கப்படும். 

►  கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்.

►  நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படும் 

►  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும். 

►  நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்த அனைத்து மாநிலங்களுடன் பேசி கருத்து ஒற்றுமை ஏற்பட வழிவகை செய்யப்படும். 

►  சட்டம், பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட கல்வியிடங்களின் எண்ணிக்கை மேலும் 50% அதிகரிக்கப்படும். 

►  பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு தயாரிப்புகளை ஏற்படுத்த தொடந்து திட்டம் வகுக்கப்படும். 

►  நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 

►  2024ம் ஆண்டுக்குள் 200 கேந்திரிய, நவோதயா பள்ளிகள் திறக்கப்படும். 

►  2024ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும். 

►  ஆதாருடன் அனைத்து நிலப்பத்திரங்களும் இணைக்கப்பட்டு கணினி மயமாக்கப்படும். 

►  நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

►  அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டில் செயல்பட்டு வரும் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

►  நவீன படை கருவிகள் வழங்குவதன் மூலம் இராணுவத்தின் தாக்கும் திறன் மேலும் வலிமைப்படுத்தப்படும். 

►  வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக ஊடுருவும் தீவிரவாதிகளை தடுக்க சரியான நடவடிக்கைகளை எடுக்கப்படும். 

►  புதிய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான கடன் வழங்கப்படும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP