கொல்கத்தா பொதுக்கூட்டம்- தலைவர்கள் பேச்சு

ஒருங்கிணைந்த இந்தியா என்ற தலைப்பில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் மாநாட்டில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மோடிக்கு எதிராக ஆவேசமாக பேசினர்.
 | 

கொல்கத்தா பொதுக்கூட்டம்- தலைவர்கள் பேச்சு

ஒருங்கிணைந்த இந்தியா என்ற தலைப்பில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் மாநாட்டில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மோடிக்கு எதிராக ஆவேசமாக பேசினர்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. 

 கூட்டத்தில் ஸ்டாலின், தேவேகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, அரவிந்த கெஜ்ரிவால் , மல்லிகார்ஜூன கார்கே  உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள்  யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி  ஆகியோரும் கலந்து கொண்டனர். ஹிர்த்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி , சத்ருகன் சின்கா  ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

யஷ்வந்த் சின்கா பேசும்போது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கு எதிராக  மட்டுமே மோதிக்கொண்டு இருப்பதாக கூறுவார்கள். இது அதிகாரத்தில் இருந்து ஒருவரை இறக்குவது பற்றி அல்ல. நாம் ஒரு சித்தாந்தத்தை தோற்கடிப்பதற்காக ஒன்று சேர்ந்து வந்துள்ளோம் என்றார்.

அசாம்  முன்னாள் முதலமைச்சர் ஜிகாங் அபாங் பேசும்போது, மாநிலம் மோசமான கட்டத்திற்கு செல்கிறது. சிபிஐ அவர்கள்  கைப்பாவையாக உள்ளது.  இந்த பேரணி இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கட்டும். என கூறினார்.

முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை நாடு சந்தித்து வருகிறது.  அனைத்து கட்சிகளும் பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஐ தோற்கடிக்க ஒன்றாக வர வேண்டும் என்று குஜராத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி கூறினார்.

ஹர்த்திக் படேல் பேசும்போது,  சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிசாரை  எதிர்த்து போராடினார், நாங்கள் திருடர்களை எதிர்த்து போராடுகிறோம் என்றார்.

வேறு எந்த அரசாங்கமும் இதைப் போன்ற மக்களுக்கு பொய் கூறியதில்லை, கர்நாடகத்தில் நடப்பது போன்று பாராளூமன்ற தேர்தலிலும்  நடக்கும், எனவே நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என முன்னாள் அமைச்சர் அருண் ஷோரி கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP