புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் !

சென்னையிலிருந்து நேற்று கொல்கத்தா சென்ற விமானம், பயணி ஒருவருக்காக ஒடிசாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
 | 

புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் !

சென்னையிலிருந்து நேற்று கொல்கத்தா சென்ற விமானம், பயணி ஒருவருக்காக ஒடிசாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து நேற்று கொல்கத்தா சென்று கொண்டிருந்த இண்டிகோ(6E292) விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. அவருக்கு தேவையான முதலுதவிகள் செய்யப்பட்டும், அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதால், கட்டுப்பாட்டு அறையின் அனுமதி பெற்று, விமானம் அவசர அவசரமாக, புவனேஸ்வரில் தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறக்கப்படும் அதே சமயத்தில் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது. புவனேஷ்வரில் உள்ள மருத்துவமனைக்கு அந்த பயணி கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது அங்கிருந்த விமானப் பயணிகளிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP