பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குங்கள் - நிர்மலா சீதாராமன்

இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து பேசினார் மேலும் அவர் பல்வேறு திட்டங்களையும் அறிவித்துள்ளார்.
 | 

அப்போது பேசிய அவர், "2020 மார்ச் 31ம் தேதிக்குள் வாங்கப்படும் பிஎஸ் 4 வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கப்படும்.  வங்கியில்லாத நிதி நிறுவனங்கள் ஆதார் முறையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும். ஜிஎஸ்டி ரீ -பண்ட் 60 நாட்களில் தீர்க்கப்படும். மேலும், அந்த தொகை 30 நாட்களுக்குள் திரும்ப தரப்படும். நீண்டகால குறுகிய கால மூலதன ஆதாயங்கள் மீது கூடுதல் வரி விதிப்பு இனி கிடையாது.

வெளிநாட்டு பங்குச்சந்தை முதலீடுகள் மீதான கூடுதல் வரி விதிப்பு திரும்ப பெறப்படும். மேலும் உங்கள் பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குங்கள். இதன்மூலம் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட சரிவை நாம் சரி செய்ய முடியும். 

இந்திய பொருளாதாரம் சீனா, அமெரிக்காவை விட நன்றாக இருக்கிறது. எனவே, இந்தியப் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அனைத்து பொருளாதார திட்டங்களும் நிறைவேற்றப்படும். பெருநிறுவனங்கள் முதலீடுகளை திரட்டுவதற்கு ஆர்பிஐ விதிகள் தளர்த்தப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களின் செலவுகளை மத்திய அமைச்சரவை தொடர்ந்து கண்காணிக்கும் ஜி.எஸ்.டி பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விரைவில் குறைக்கப்படும். இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை தொடர்ந்து வளர்ச்சி நிலையில் தான் இருக்கிறது" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP