200 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து கோர விபத்து; 12 பேர் உயிரிழப்பு !

ஹிமாச்சல பிரதேசத்தில் 200 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
 | 

200 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து கோர விபத்து; 12 பேர் உயிரிழப்பு !

ஹிமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் பன்ச்புலா பாலம் அருகே பதான்கோட்டிலிருந்து டல்ஹவுசி நாேக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையிலிருந்து விலகி 200 அடி பள்ளத்தில் கவிழந்தது.

இந்த கோர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த ‌போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்கைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP