Budget 2019 Live Updates: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
 | 

Budget 2019 Live Updates: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார். 

1.10: பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான உரையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார்.தொடர்ந்து, மக்களவை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

1.00: நாடு முழுவதும் உள்ள சாலை வசதிகளை மேம்படுத்த பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிப்பு.

வரும் 5 ஆண்டுகளில் சாலை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக கட்டுமானத்துறைக்கு ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10% லிருந்து 12.5% ஆக உயர்வு.   புத்தகங்களுக்கு 5% இறக்குமதி வரி விதிப்பு. 

இந்தியாவில் உற்பத்தியாகாத ராணுவ தளவாட இறக்குமதிக்கு சுங்கவரி இல்லை. 

நிதி பற்றாக்குறை 3.4% லிருந்து 3.3% ஆக குறைந்துள்ளது. 

12.50: வருமானவரி செலுத்தும் போது, பான் கார்டு இல்லை என்றால் ஆதார் கார்டை பயன்டுத்தி வருமானவரி தாக்கல் செய்யலாம். 

வரி செலுத்தும் போது எழும்பும் பிரச்னைகள் குறித்து தெரிந்துகொள்ள இனி அதிகாரிகளோடு உரையாடத் தேவையில்லை. பதிலாக அடையாளம் தெரியாதவாறு வரித்துறையில் உள்ள ஒருவர், வரி செலுத்துவோரை தொடர்பு கொள்வர். மின்னணு முறையில் இது படிப்படியாக செயல்படுத்தப்படும். இதன்மூலமாக வருமானவரி தாக்கலில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படும். 

ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி. வருமானம் ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக இருந்தால் 3% கூடுதல் வரி விதிப்பு. 

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளுக்கு பணப்பரிவர்த்தனை கட்டணம் இல்லை. வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை. ரூ.5 லட்சத்துக்கு குறைவாக வருமானம் இருந்தால் வரிவிலக்கு. 

 எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 12% இருந்து, 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை

Budget 2019 Live Updates: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்!

ஆண்டுக்கு  ரூ.1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து ரொக்கமாக பணம் எடுத்தால் 2% வரி பிடித்தம் செய்யப்படும். 

கடனில் வாங்கப்படும் மின்சார வாகனங்களுக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும். 

12.40: ரூ. 250 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு 25% வரி விதிப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இது தற்போது 400 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும்  நிறுவனங்களுக்கு  25% வரிவிதிப்பு அளிக்கப்படுகிறது.  98.3% நிறுவனங்கள் இந்த வரிவிதிப்பில் அடங்கும். 

கடந்த  5 ஆண்டுகளில் நேரடி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் இருந்து நடப்பு ஆண்டில் நேரடி வருவாய்  ரூ. 6.38 லட்சம் கோடியில் இருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பார்வையற்றோர் தெரிந்துகொள்ளும் வகையில்  ரூ.1, 2, 5, 10 மற்றும் 20 நாணயங்கள் வெளியிடப்படும்.

உலகத் தரத்தில் 74 புதிய சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும். 

வெளிநாடுகளுடன் சுமூக உறவை கடைபிடிக்கும் வண்ணம், புதிதாக 4 வெளிநாட்டு தூதரகங்கள் அமைக்கப்படும் .

ஜிடிபியில் இந்தியாவின் கடன் அளவு 5% க்கும் குறைவாக உள்ளது.

ஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும்.

புறநானூற்றில் 'யானை புகுந்த நிலம்' என்ற பிசிராந்தையாரின் பாடலை மேற்கோள் காட்டி, மக்களிடம் எவ்வாறு வரி வசூலிக்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.  

12.30: நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வருமான வரியை முறையாக செலுத்தும் அனைத்து மக்களுக்கும் நன்றி. 

நாட்டின் உள்கட்டமைப்பை  மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் அரசு 100 கோடி ரூபாய் முதலீடு செய்யும். 

பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை விற்பதன் மூலமாக 1.05 லட்சம் கோடி திரட்டப்படும். 

வங்கி அல்லாத பொதுத்துறை  நிறுவனங்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள். பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு குறைந்தபட்சம் 51% ஆக நீடிக்கும்.  

12.20: மோசமான நிலையில் உள்ள 6 பொதுத்துறை  வங்கிகள் மீட்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பு மூலமாக பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

பொருளாதாரத்தை மேம்படுத்த, பொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு மூலதனம் வழங்கப்படும். 

கடந்த ஒரு நிதியாண்டில் மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு ஆதார் கார்டு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களது பாஸ்போர்ட்டுடன் ஆதார் இணைக்கப்படும். 

கழிவுகள் சுத்திகரிப்புக்கு  ரோபோக்கள், இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். 

குறைந்த பட்ஜெட் வீடுகள் வாங்குவோருக்கான வரிச்சலுகை ரூ.3.5 லட்சமாக அதிகரிப்பு

தூய்மை இந்தியா திட்டத்திற்கான செயலியை ஒரு கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 

2030ஆம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை. 

12.10: முத்ரா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.1 லட்சம் வரை  கடன் வழங்கப்படும். 

நாட்டின் அனைத்து  துறையிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அனைத்து துறையிலும் பெண்கள் ஈடுபட வேண்டும். 

மக்களவைத் தேர்தலில் அதிகளவு பெண்கள் வாக்களித்துள்ளனர். 78 பெண்கள் நாடாளுமன்ற அவையில் உள்ளனர். 

ஒரு நாடு நலம் பெறவேண்டுமெனில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்படியே, மத்திய அரசு பெண்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 

ஸ்டார்ட் அப் துறையை மேம்படுத்த தூதர்ஷனில் தனி நிகழ்ச்சி ஒளிபரப்ப நடவடிக்கை. 

ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும். 

11.50: நாடு முழுவதும் உயர்கல்விக்கு புதிய கல்விக்கொள்கை திட்டம். இந்த புதிய கல்விக்கொள்கை உலக அளவில் முக்கியத்துவம் பெறும். கல்வித்துறையில் வளர்ச்சியடைய தேசிய ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கப்படும். 

நாடு முழுவதும் உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ஜலசக்தி அமைச்சகம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்க புதிய திட்டம். 

காந்திய கொள்கைகளை அனைத்து இளைஞர்களுக்கும் கொண்டு செல்லும் பொருட்டு 'காந்திப்பீடியா' உருவாக்கப்பட்டு வருகிறது. 

அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை வழங்க நடவடிக்கை. 

அவாஸ் யோஜனா மூலமாக நகரங்களில் 81 லட்சம் வீடுகள்  கட்டப்பட்டுள்ளன. 95% நகரங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லா நிலையில் மாறியுள்ளன. அதேபோன்று 5.6 லட்சம்  கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லா பகுதிகளாக மாறியுள்ளன. 

Budget 2019 Live Updates: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்!

2019 அக்டொபர் 2ம் தேதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளும் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லா பகுதிகளாக மாற நடவடிக்கை. 

'ஸ்வச் பாரத் திட்டம்' அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைந்துள்ளது. 9.6 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 

விவசாயத்துறையில் தனியார் பங்களிப்பு தேவைப்படுகிறது. 

11.40: கிராம் சதக் யோஜனா மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 80,250 கோடி ரூபாய் மதிப்பில் 1,25,000 கி.மீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.

11.35: 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு, சமையல் எரிவாயு, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை. 2022ம் ஆண்டிற்குள்  1.95 கோடி வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

உஜ்வாலா யோஜனா, அவாஸ் யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடிகுடும்பங்களுக்கு  சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

Budget 2019 Live Updates: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்!

விண்வெளித்துறையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிதாக ஒரு விண்வெளி மையம் ஏற்படுத்த நடவடிக்கை. 

காப்பீட்டுத் துறையில்உள்ள  இடைநிலை அமைப்புகளுக்கு 100% அந்நிய முதலீடு வழங்க திட்டம். 

அனைத்து தரப்பினரும் தொழில் செய்யும் பொருட்டு, உலக முதலீட்டாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்படும். 

வர்த்தகர்களுக்கான ஓய்வூதியம் மேலும் விரிவுபடுத்தப்படும். 

11.20: வாடகைக்கு குடியிருப்போருக்கான புதிய சீர்திருத்த நடைமுறைகள் கொண்டு வரப்படும். 

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். மேலும் ரூ.350 கோடி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 5 ஆண்டுகளில் 657 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 300 கிமீ அளவுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது . 

ரயில்வே வளர்ச்சிக்கு தனியாருடன் சேர்த்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். 2030ம் ஆண்டுக்குள் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய நடவடிக்கை. 

ஒரே நாடு; ஒரே மின்திட்டம் மூலமாக அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான மின்சேவை வழங்கப்படும். மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும். அனைத்து ரயில் தடங்களும் மின்மயமாக்கப்படும்.

கங்கையாற்றில் படகு சரக்கு  போக்குவரத்தை அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது . 

Budget 2019 Live Updates: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்!

11.15: கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் பணபரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ரூபே டெபிட் கார்டுகள் அனைத்து பணப்பரிமாற்றத்திற்கும் பயன்படுத்த்ப்பட்டு வருகின்றன. 

உலகபொருளாதாரத்தில் 6வது மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. 

11.10:  உதான் திட்டம் மூலமாக சிறிய நகரங்களும் விமான சேவையை பெற்று வருகின்றன. இதர நகரங்களுக்கும் தொடர்ந்து விரிவு படுத்தப்படும்.

வரும் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர்களாக கொண்டு வரப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி டாலருக்கு உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நலனை கருத்தில் கொண்டே மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. 

நெடுஞ்சாலைத்துறை, ரயில்வேயில் மத்திய அரசு வியக்கும்படியான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் சாகர்மாலா திட்டம்முக்கியத்துவம் வாய்ந்தது. 

11.05:  சந்திராயன், ககன்யான் என விண்வெளித்துறையிலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது. வருமானவரித்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

முத்ரா திட்டத்தின் மூலமாக பலர் தொழில் தொடங்கியுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் மின்சாரம், வேலைவாய்ப்பு, பெண்களுக்கான திட்டங்கள், அனைவருக்கும் கழிப்பறை என பல சீரமைப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

கடந்த 2014ம் ஆண்டு 1.55  லட்சம் லட்சம் கோடியாக இருந்த இந்திய பொருளாதாரம் அடுத்த 5ஆண்டுகளில்  2.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 

தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கடந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். அதிகளவு பெண்கள் வாக்களித்துள்ளனர். 

சீரமைப்பு, செயல்பாடு, மாற்றம் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது . 

11.00: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  அவர் பட்ஜெட் மீதான தனது உரையை தொடங்கியுள்ளார்.

10.40: மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை. 

10.35 : பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி, பங்குச்சந்தை நிலவரம் உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் புள்ளிகள் 40,000 யை நெருங்கியுள்ளன. 

10.30: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக அமைச்சர்கள் நாடாளுமன்றம் வருகை. 

10.15 : மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை 

10.00 : முதல் முறையாக பெட்டியில் அல்லாமல் உறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 

9.45 : பட்ஜெட்டை தாக்கல் செய்வதையொட்டி, அமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

Budget 2019 Live Updates: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான செலவினங்களுக்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன்  மத்தியில் 2வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் நிதித்துறை பதவி நிர்மலா சீதாராமனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டிற்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP