மூளைக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 108 ஆக உயர்வு! பீகார் முதல்வர் ஆய்வு..

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று முசாபர்பூர் மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகிறார்.
 | 

மூளைக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 108 ஆக உயர்வு! பீகார் முதல்வர் ஆய்வு..

பீகார் மாநிலம். முசாபர்பூரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று முசாபர்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆய்வு செய்து வருகிறார். 

பீகார் மாநிலம் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து மூளைக் காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. 

இதையடுத்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முசாபர்பூரில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகிறார். இந்த மருத்துவமனையில் மட்டும் இதுவரை 89 பேர் பலியாகியுள்ளனர். 

முன்னதாக, அங்கு மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளிக்கக் கோரி, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP