Logo

'பி.எம். நரேந்திர மோடி' படம் வெளியாகத் தடையில்லை - உச்சநீதிமன்றம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான 'பி.எம். நரேந்திர மோடி' பட வெளியீட்டுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், இப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவைவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 | 

'பி.எம். நரேந்திர மோடி' படம் வெளியாகத் தடையில்லை - உச்சநீதிமன்றம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான 'பி.எம். நரேந்திர மோடி' பட வெளியீட்டுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், இப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு, "பி.எம்.நரேந்திர மோடி" என்ற பெயரில் பாலிவுட்டில் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில், பிரதமர் மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.  23 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் சுரேஷ் ஓபராய் மற்றும் சந்தீபி. எஸ்.சிங். படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் ஜனவரி மாதம் 7ம் தேதி வெளியான நிலையில், வருகிற ஏப்ரல் 11ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் படம் வெளியாவதால், பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறி, பட வெளியீட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்,  'பி.எம். நரேந்திர மோடி' பட வெளியீட்டுக்கு, தடை விதிக்க மறுத்ததுடன், இப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து, இந்த படம் முன்னதாக அறிவித்தபடி, வருகிற ஏப்ரல் 11ம் தேதி ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP