நடுவானில் பயணிகளுக்கு காது, மூக்கில் இருந்து ரத்தம்; அவசரமாக தரையிறக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம்!

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நடுவானில் பயணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, விமானம் வேகமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் உள் அழுத்தம் காரணமாக சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, காதில் இருந்து ரத்தம் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று இன்று மும்பையில் இருந்து ஜெய்ப்பூருக்குச் சென்றது. 160க்கும் மேற்பட்ட பயணிகள் இதில் பயணித்ததாக கூறப்படுகிறது. மும்பையில் இருந்து புறப்பட்டு நடுவானில் விமானம் சென்று கொண்டிருக்கும் போது, விமானத்தில் பயணிகளுக்கு பயங்கர தலைவலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு சிலர் வாந்தி  எடுத்துள்ளனர். சிலருக்கு வாந்தி எடுக்கும் போது ரத்தம் வந்துள்ளது. அதேபோல் ஒரு சில பயணிகளுக்கு காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது.

பின்னர் உடனே விமானம் வேகவேகமாக மீண்டும் மும்பையிலே தரையிறக்கப்பட்டது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமானம் மேலே பறக்கும்போது, உள்அறையின் அழுத்தம் மாறும். அதற்கேற்ப அழுத்தம் சீர் செய்யப்படும். ஆனால் இந்த விமானத்தில் அழுத்தத்தை சீராக வைக்க பணிப்பெண்கள் மறந்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP