தாஜ் மஹாலை 'ராம் மஹால்' என்று மாற்ற வேண்டும்: பா.ஜ.க எம்.எல்.ஏ

இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ் மஹாலை 'ராம் மஹால்' அல்லது 'கிருஷ்ண மஹால்' என்று பெயர் மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 | 

தாஜ் மஹாலை 'ராம் மஹால்' என்று மாற்ற வேண்டும்: பா.ஜ.க எம்.எல்.ஏ

இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ் மஹாலை ராம் மஹால் அல்லது கிருஷ்ண மஹால் என்று பெயர் மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

உத்திரபிரதேசத்த மாநிலத்தின் பைரியா தொகுதி எம்எல்ஏ சுரேந்திர் சிங் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வருபவர். இவர் நேற்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, " இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும்.

அவை இன்னமும் முகலாய மன்னர்களின் பெயர்களில் வழங்கப்படக் கூடாது. அந்த வகையில், தாஜ் மஹாலின் பெயரை ‘ராம் மஹால்’ அல்லது ‘கிருஷ்ண மஹால்’ என்று பெயர் மாற்ற வேண்டும். என்னுடைய விருப்பம் அதனை ராஷ்டிரபக்த் மஹால் என்று பெயர்  மாற்றம் செய்வது தான். அவை நம் மக்களின் உழைப்பால் நமது நிலத்தில் எழுந்துள்ள கட்டிடங்கள் அவற்றை அழிக்க கூடாது" என்றார். 

சுரேந்திர் சிங்கின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP