பாஜக எம்.எல்.ஏ 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட்!

உத்தரகாண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ கன்வர் பிரணவ் சிங் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 | 

பாஜக எம்.எல்.ஏ 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட்!

உத்தரகாண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ கன்வர் பிரணவ் சிங் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

உத்தரகாண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ & சாம்பியன் கன்வர் பிரணவ் சிங் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் துப்பாக்கியை வாயில் கவ்விக்கொண்டு நடனமாடினார். இது தொடர்பாக சில அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ மீது கட்சித் தலைமையும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, எம்.எல்.ஏ கன்வர் பிரணவ் சிங் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் பிரணவ் ஏற்கனவே 3 மாதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP