ராமஜன்ம பூமி தீர்ப்பை பாஜக சொந்தம் கொண்டாட முடியாது: உத்தவ் தாக்கரே கருத்து!!

அயோத்தியா வழக்கிற்கான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதை தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பை மத்திய அரசு சொந்தம் கொண்டாட முடியாது என்ற கருத்தினை முன் வைத்துள்ளார் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே.
 | 

பல ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த வரலாற்று சிறப்புமிக்க அயோத்தியாவின் ராம்ஜன்ம வழக்கிற்கான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கியிருப்பதை தொடர்ந்து, அங்கே கோவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான ஓர் சட்டம் பிறப்பிக்கும் படி மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை முன் வைத்திருந்ததாக கூறியுள்ள சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு சொந்தம் கொண்டாட முடியாது என்ற தன் கருத்தையும் முன்வைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து பாரதிய ஜனதா-சிவசேனா கட்சிகளுக்கிடையே கடும் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், உத்தவ் தாக்கரேவின் இத்தகைய கருத்து பாஜகவின் மேலிருக்கும் அதிருப்தியை பிரதிபலிப்பதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP