அதிக பார்வையாளர்களை கவர்ந்த பாஜக விளம்பரம்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தொலைக்காட்சி விளம்பரம் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து முதலிடம் பிடித்துள்ளதாக பார்க் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
 | 

அதிக பார்வையாளர்களை கவர்ந்த பாஜக விளம்பரம்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தொலைக்காட்சி விளம்பரம் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் 12ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 7ஆம் தேதி வரை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாஜக விளம்பரங்கள் முதலிடத்தில் இருப்பதாக, பார்க் எனப்படும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இடத்தில் நெட் பிளிக்ஸ் இணையதளம் மற்றும் ட்ரிவாகோ ஆகியவற்றின் விளம்பரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் முதல் 10 இடங்களில் பாஜகவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் விளம்பரம் இடம்பெறவில்லை என்றும் பார்க் தெரிவித்துள்ளது.
 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP