பிரதமர் மோடிக்கு விருது வழங்கும் பில்கேட்ஸ்! எதற்குத் தெரியுமா?

தூய்மை இந்தியா' திட்டம் வெற்றி பெற்றதையடுத்து, அதனை பாராட்டி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் தனது அறக்கட்டளையின் சார்பாக பிரதமர் மோடிக்கு விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
 | 

பிரதமர் மோடிக்கு விருது வழங்கும் பில்கேட்ஸ்! எதற்குத் தெரியுமா?

 'தூய்மை இந்தியா' திட்டம் வெற்றி பெற்றதையடுத்து, அதனை பாராட்டி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் தனது அறக்கட்டளையின் சார்பாக பிரதமர் மோடிக்கு விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் 'தூய்மை இந்தியா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் கீழ், சுத்தம், சுகாதாரம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, கழிப்பறை உபயோகிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி, கடந்த 5 ஆண்டுகளில் பல கோடி மக்களுக்கு இலவச கழிப்பறையை கட்டித் தருவது உள்ளிட்ட பணிகளை மத்திய அரசு செய்துள்ளது. 

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் தனது அறக்கட்டளையின் சார்பாக பிரதமர் மோடிக்கு விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த மாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அந்த சமயத்தில் இந்த விருது வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP