என்ஐஏ -வுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்

தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா, மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 278 எம்.பி.க்கள் இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக, கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டால், என்ஐஏ-வை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
 | 

என்ஐஏ -வுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்

தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா, மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 278 எம்.பி.க்கள் இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

முன்னதாக, கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டால், என்ஐஏ-வை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, " தற்போதைய நிலையில், என்ஐஏ -வுக்கு கூடுதல் அதிகாரம் தேவைப்படுகிறது. இதனை மத்திய அரசு ஒருபோதும் தவறாக பயன்படுத்தாது. மாறாக, இதன் மூலம் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமடையும். 2008 -இல், மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு அப்போதைய காங்கிரஸ் அரசு தான் என்ஐஏ-வை உருவாக்கியது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது" என அவர் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP