காஷ்மீர் விவகாரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை தான்: வெளியுறவுத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

காஷ்மீர் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடந்தால் அது இருதரப்பு பேச்சுவார்தையாக தான் இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
 | 

ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் சந்திப்பில், காஷ்மீர் விவகாரத்தில் தம்மை மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால், இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரும் மறுப்பு தெரிவித்திருந்தார். 

இதன் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டுத் தலைவர்கள் விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்து உதவ தயாராக இருக்கிறேன்" என்று கூறினார். 

இதையடுத்து தாய்லாந்தில் ஆசிய மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோவை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சந்தித்த பேசினார். அப்போது, காஷ்மீர் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடக்கும்பட்சத்தில் அது இருதரப்பு பேச்சுவார்தையாக தான் இருக்கும். மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP