பைக் ரேசிங் விபரீதம்: பாலத்தில் இருந்து விழுந்து இளைஞர்கள் பலி

புதுடெல்லியில் உள்ள பிரபல சிக்னேச்சர் பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டிருந்த இரண்டு இளைஞர்கள், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி கீழே விழுந்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
 | 

பைக் ரேசிங் விபரீதம்: பாலத்தில் இருந்து விழுந்து இளைஞர்கள் பலி

புதுடெல்லியில் உள்ள பிரபல சிக்னேச்சர் பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டிருந்த இரண்டு இளைஞர்கள், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி கீழே விழுந்து உயிரிழந்தனர்.

இந்த மாதம் புதுடெல்லியில் 'சிக்னேச்சர் பிரிட்ஜ்' எனும் பிரபல பாலம் திறந்து வைக்கப்பட்டது. டெல்லியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் இந்தப் பாலம் பயண நேரத்தை கணிசமாக குறைப்பது மட்டுமல்லாமல், தலைநகரின் கவர்ச்சிகரமான ஒரு இடங்களுள் ஒன்றாகவும் மாறியுள்ளது. பாலம் திறந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில், ஒரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேற்று காலை பாலத்தில் அதிவேகமாக பைக்கில் சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரில் மோதினர். இதைத் தொடர்ந்து இருவரும் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இளைஞர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இருவருமே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், இருவரின் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர் 23 வயதேயான மருத்துவ பட்டதாரி என தெரியவந்துள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP