எழுதாத தேர்வுக்கு மதிப்பெண்கள் அளித்த பீகார் தேர்வு வாரியம்; மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி!

பீகாரில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண்களை விட கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

எழுதாத தேர்வுக்கு மதிப்பெண்கள் அளித்த பீகார் தேர்வு வாரியம்; மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி!

பீகாரில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண்களை விட கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று பீகார் பள்ளித் தேர்வு வாரியம் வெளியிட்டது. தேர்வு முடிவுகள் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்வு முடிவுகள் வெளியானால் வர வேண்டியதை விட குறைவான மதிப்பெண்கள் வந்துள்ளது என்று தான் மாணவர்கள் குற்றம் சாட்டுவர். ஆனால் பீகார் மாநிலத்தில் தலைகீழாக நடந்துள்ளது. மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண்களைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கே வராத மாணவர்கள் சிலருக்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் அர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் பீம் குமார், கணித பாடத்தில் பபெற்ற மதிப்பெண் 38. ஆனால் மொத்த மதிப்பெண்கள் 35 தான். அதேபோன்று சந்தீப் ராஜ் என்ற மாணவர் இயற்பியல் பாடத்தில் 35 க்கு 38 மதிப்பெண் பெற்றுள்ளார். மற்றொரு மாணவருக்கு இரண்டு பாடங்களில் பூஜ்ய மதிப்பெண் போடப்பட்டுள்ளது. இது சாத்தியமே இல்லை என அந்த மாணவர் கூறுகிறார். வைஷாலி என்ற மாணவி உயிரியல் தேர்வை எழுதவே இல்லை. அவருக்கு 18 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை பீகார் மட்டுமல்ல இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பீகார் பள்ளித்தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP