பாரதி ஏர்டெல் : காலாண்டின் இறுதியில் ரூ.23,045 கோடி இழப்பு!!!

இந்தியாவின் இரண்டாவது பெரிய வயர்லெஸ் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான பாரதி ஏர்டெல், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதி ஆண்டிற்கான காலாண்டின் முடிவில், ரூ.23,044.9 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 | 

கடந்த ஆண்டின் இறுதியில் ரூ.118.8 கோடி ரூபாய் லாபமடைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்த இந்த நிறுவனத்தின் தற்போதைய இழப்பு  நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான வருவாய் கணக்கு வெளியிடப்படுவதற்கு முன்னதாக, ஏர்டெல்லின் பங்குகள் சுமார் 5 சதவீதம் சரிந்ததாகவும் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

பாரதி ஏர்டெல்லின் தற்போதைய நிதி முடிவுகளை பொறுத்தவரை, கடந்த ஜூலை-செம்டம்பர் மாதங்களில் அதன் ஒருங்கிணைந்த இயக்க லாபம் ரூ. 8,936 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஒருங்கிணைந்த ஈபிஐடிடிஏ விளிம்பு கடந்த ஆண்டின் 31.5 சதவீதத்திலிருந்து, இந்த ஆண்டிற்கான காலாண்டின் முடிவில் 42.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

தொலைதொடர்பு துறையின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயிற்காக செலுத்த வேண்டிய அபராதம் மற்றும் நிலுவைத் தொகை ரூ.34,260 கோடி ரூபாய் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

விதிவிலக்கான பொருட்களையும் சேர்த்த காலாண்டின் இழப்பீடு ரூ.1,123 கோடி ரூபாயாக இருந்ததாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, பாரதி ஏர்டெல்லின் பிஎஸ்இயின் பங்குகளில் 1.59 சதவீதம் குறைந்துள்ள நிலையில், சென்செக்ஸ் குறியீட்டில் 0.42 சதவீதமே எட்டியுள்ளது. இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகையை செலுத்துவதற்காக உச்ச நீதிமன்றம் 3 மாத கால அவகாசம் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது ஏர்டெல் தொலைதொடர்பு சேவை நிறுவனம்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP