பாரதிய ஜனதா வெர்ஷன் பாகுபலி: வைரலாகும் வீடியோ!

மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகானை பாகுபலியாக சித்தரிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

பாரதிய ஜனதா வெர்ஷன் பாகுபலி: வைரலாகும் வீடியோ!

மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகானை பாகுபலியாக சித்தரிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் வெல்ல ஆளும் பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் இப்போதே பிரச்சார வேலைகளை துவங்கி விட்டன. இன்டர்நெட் காலத்தில், பொதுமக்களையும், இளைஞர்களையும் கவர எளிதான வழி, இன்டர்நெட் மீம்ஸ் தான் என்பதை தற்போதைய அரசியல்வாதிகள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். 

இந்நிலையில், முதலமைச்சர் ஷிவ்ராஜ் சவுகானை பாகுபலி போல சித்தரிக்கும் வீடியோ மீம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பாகுபலி போல பெரிய சிவலிங்கத்தை தனது தோள்களில் தூக்கிச் செல்கிறார் சவுகான். இதை எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல், கமல்நாத், திக் விஜய் சிங் ஆகியோர் வாய்பிளந்து பார்க்கின்றனர். வில்லன் பல்வாள்தேவனாக, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரை ஷிவ்ராஜ் சிங் வீழ்த்துவது க்ளைமேக்ஸ். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதாவை குற்றம் சாட்டியது. ஆனால், தங்களுக்கும் இந்த விடியோவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என பா.ஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மேல் இருக்கும் பாசத்தால், அவரது பொதுமக்கள் யாராவது இவ்வாறு செய்திருக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP