பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50 லட்சம் கடன்: பிரதமர் மோடி !

பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு எந்தவிதமான பிணையுமின்றி 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 | 

டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,  இந்த நாட்டின் முதுகெலும்பு வர்த்தகர்கள், வியாபாரிகள் தான் எனவும், அவர்களது பங்களிப்பினால் தான் இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் 2 மடங்கு உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.  

மேலும், வர்த்தகர்களுக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி வரையிலான கடன் கிடைக்க வழிவகை செய்துள்ளதை குறிப்பிட்ட அவர்,  பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசிய வர்த்தகர் நல வாரியம் அமைக்கப்பட்டு, வர்த்தகர்களுக்கு எந்த ஒரு பிணையும் இல்லாமல், ரூ.50 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP