இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள்: தமிழகத்தின் அசத்தல் சாதனை!

நாட்டிலேயே வாழ்வதற்கு வசதியான நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டத்தில், டாப் 10 இடங்களில் எந்த தமிழக நகரமும் இடம் பெறாவிட்டாலும், டாப் 50 இடங்களுக்குள் 12 பெரிய நகரங்களுமே இடம்பெற்றுள்ளன.
 | 

இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள்: தமிழகத்தின் அசத்தல் சாதனை!

நாட்டிலேயே வாழ தகுதியான நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டத்தில், டாப் 10 இடங்களில் எந்த தமிழக நகரமும் இடம் பெறாவிட்டாலும், டாப் 50 இடங்களுக்குள் 12 பெரிய நகரங்களுமே இடம்பெற்றுள்ளன. 

இந்தியாவில் வாழ தகுதியான நகரங்களை பட்டியலிட்டு மத்திய நகர மேம்பட்டுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 3 நகரங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. புனே முதலிடத்தை பிடிக்க, நவி மும்பை இரண்டாவது இடத்தையும், பெருநகர மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. 

அவற்றை தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தின் திருப்பதி, சண்டிகர் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை டாப் 10-ல் எந்த நகரமும் இடம்பெறவில்லை. ஆனால்,  மாநிலத்திலேயே சிறந்த நகரமாக திருச்சிராப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாடளவில் 12வது இடத்தை திருச்சியும், 14வது இடத்தை சென்னையும் பிடித்துள்ளன.

மேலும், 25வது இடத்தில் கோவை, 26வது இடத்தில் ஈரோடு, 28வது இடத்தில் மதுரை, 29வது இடத்தில் திருப்பூர், 37வது இடத்தில் நெல்லை, 40வது இடத்தில் திண்டுக்கல், 42வது இடத்தில் சேலம், 43வது இடத்தில் தஞ்சாவூர், 44வது இடத்தில் தூத்துக்குடி, 49வது இடத்தில வேலூர் என அனைத்து பெருநகரங்களும் முதல் 50 இடங்களுக்குள் வந்து மற்ற மாநிலங்களை விட வாழ தகுதியான மாநிலமாக தமிழகத்தை நிறுத்தியுள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP