உலக அழகி ஐஸ்வர்யா ராய் தன் மகளுக்கு சொல்லிக்கொடுத்த பியூட்டி டிப்ஸ்!

உலக அழகிப் பட்டம் வென்றதோடு மட்டுமின்றி, பாலிவுட், கோலிவுட் என அனைத்து வகை சினிமாக்களிலும் கதாநாயகியாக முத்திரை பதித்தவர் ஐஸ்வர்யா ராய்.
 | 

அவர், ஹிந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துள்ளார். அந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இன்றும், காண்போரை கட்டி இழுக்கும் வகையிலான மிளிரும் அழகுடன் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய், தன் அழகின் அகசியத்தை மகளுக்கும் சொல்லிக்கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். 

அழகின் ரகசியம் குறித்து அவர் மேலும் கூறுகையில், ''முடிந்த வரை அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகளை உட்கோள்ள வேண்டும். நீர் சத்து மிக்க உணவுகளை அதிகம் உட்கொள்வதால், மேனி எப்போதும் பளபளப்புடன் காணப்படும். 

எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சியளித்தால் அதுவே கூடுதல் அழகை தரும். எப்போதும் மனதை புத்துணர்வுடன் வைத்திருந்தால், அது முகத்திலும் பிரதிபலிக்கும்'' இதைத்தான் என் மகளுக்கும் சொல்லிக்கொடுத்துள்ளேன் என அவர் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP