கடந்த 9 தேர்வுகளின் வினாத்தாள்களை வெளியிட்டது பார் கவுன்சில்!

கடந்த 9 அகில இந்திய பார் கவுன்சில் தேர்வுகளின் வினாத்தாள்களை இந்திய பார் கவுன்சில் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுவரை 13 தேர்வுகள் நடைபெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

கடந்த 9 தேர்வுகளின் வினாத்தாள்களை வெளியிட்டது பார் கவுன்சில்!

கடந்த 9 அகில இந்திய பார் கவுன்சில் தேர்வுகளின் வினாத்தாள்களை இந்திய பார் கவுன்சில் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

இந்திய பார் கவுன்சிலால் நடத்தப்படுவது  All India Bar Examination (AIBE) எனப்படும் தேர்வுகள். இதுவரை 13 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த 13 தேர்வுகளில் 9 தேர்வுகளின் வினாத்தாள்கள் பார் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த தேர்வுகள் ஐடிஇஎஸ் ஹரிசான் எனும் தனியார் நிறுவனத்தோடு இணைந்து பார் கவுன்சில் நடத்துகிறது. 100 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் என 3 மணி நேரம் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு ரூ.2560 விண்ணப்ப கட்டணமாக கொடுக்க வேண்டும். 

இந்த வினாத்தாள்கள் முன்பே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்வு எழுதுவதற்கு உதவியாக இருக்கும் என்று கல்வி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் விவரங்களுக்கு :  http://www.allindiabarexamination.com/

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP