நாடு முழுவதும் 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது...!

வங்கிப் பணியாளர் சங்கங்கள் இருநாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், நாளை முதல் 5நாட்களுக்கு வங்கிகள் செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வங்கிப் பணிகளும் ஏடிஎம் சேவைகளிலும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிய வந்துள்ளது
 | 

நாடு முழுவதும் 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது...!

வங்கிப் பணியாளர் சங்கங்கள் இருநாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், நாளை முதல் 5நாட்களுக்கு வங்கிகள் செயல்பட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ஊதிய உயர்வு, பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்க எதிர்ப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 21இல் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். டிசம்பர் 24 திங்கட்கிழமை மட்டும் வங்கிகளுக்கு வேலை நாளாகும். டிசம்பர் 25 செவ்வாயன்று கிறிஸ்துமஸ் என்பதால் அரசு விடுமுறை. டிசம்பர் 26ஆம் தேதி புதன்கிழமையன்றும் வேலை நிறுத்தத்துக்கு வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் புதன்கிழமை வரை (திங்கள்கிழமை தவிர்த்து) 5 நாட்கள் வங்கிகள் செயல்பட இயலாத சூழல் நிலவுவதால் வங்கிப் பணிகளும் ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும்  எனத் தெரிய வந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP