பெங்களூர்: PUBG விளையாட்டிற்கு தடையாக இருந்த தந்தையை கொலை செய்த மகன் கைது!

PUBG கேம் விளையாடுவதற்கு தடையாக இருந்த தந்தையை கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

பெங்களூர்: PUBG விளையாட்டிற்கு தடையாக இருந்த தந்தையை கொலை செய்த மகன் கைது!

PUBG கேம் விளையாடுவதற்கு தடையாக இருந்த தந்தையை கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த  ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சங்கரப்பா குமாரின் மகன்  ரகுவீர். இவர் ஆன்லைன் கேம்மான PUBG விளையாட்டிற்கு அடிமையாக இருந்திருக்கிறார். அதிக நேரம் கேம்மில் மூழ்கி இருக்கும் மகனை சங்கரப்பா கண்டித்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி இவர்களுக்குள்  சண்டை வருவது வழக்கமாக இருந்திருக்கிறது.

இந்நிலையில் நேற்று விளையாட்டு தொடர்பாக இருவரும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது . இதனால் ஆத்திரமடைந்த ரகுவீர்  தந்தையை கொலை செய்துவிட்டால் விளையாடுவதற்கு தடையிருக்காது என எண்ணி நேற்றிரவு தனது தந்தை என்றும் பாராமல் தலை, கை, கால் உள்ளிட்டவற்றை துண்டித்து கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்  ரகுவீரை கைது  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூர்: PUBG விளையாட்டிற்கு தடையாக இருந்த தந்தையை கொலை செய்த மகன் கைது!

இதேபோல PUBG கேம்மில் மூழ்கிய இளைஞர் ஒருவர் கடந்த அகஸ்ட் 27ம் தேதி  கேம் விளையாடும் மும்மரத்தில் குளத்தில் தவறி விழுந்து இறந்துள்ளார். மேலும் கொல்கத்தாவில் PUBG கேம் விளையாடுவதை நிறுத்த கூறி  தாய் திட்டியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தற்கொலைகள் மற்றும் கொலைகளுக்கு காரணமாக இருக்கும் PUBG  போன்ற வன்முறையை தூண்டக்கூடிய ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP