மீண்டும் வேண்டும் கிரண் பேடி - டெல்லி காவலர்கள் போராட்டம்!!

டெல்லி : கிரண் பேடியை டெல்லி பிரதேச காவல்துறை ஆணையராக மீண்டும் நியமிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் டெல்லி காவல் துறையினர்.
 | 

மீண்டும் வேண்டும் கிரண் பேடி - டெல்லி காவலர்கள் போராட்டம்!!

டெல்லி : கிரண் பேடியை டெல்லி பிரதேச காவல்துறை ஆணையராக மீண்டும் நியமிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் டெல்லி காவல் துறையினர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, நீதிமன்ற வளாகத்தில் வண்டி நிறுத்துவது தொடர்பாக காவல் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே வெடித்த வார்த்தை தகராறு, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதை தொடர்ந்து, அதற்கு மறுநாள் ஏற்பட்ட ஓர் பிரச்சனையில், போலீஸ் அதிகாரியை, வழக்கறிஞர் ஒருவர் பலமாக தாக்கியதை தொடர்ந்து, இது போன்ற சம்பவங்கள் பல முறை ஏற்பட்ட நிலையிலும் பொறுமை காத்து வந்து காவல் துறையினர், இந்த இரு சம்பவங்களை கண்டு சகிக்க இயலாமல் தான், தற்போது வழக்கறிஞர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையில், இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் சட்ட ஒழுங்கை காப்பதற்காக காவல் துறையினர் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த டெல்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்னாயக், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார். 

எனினும், இவரின் இந்த கோரிக்கையை தொடர்ந்தும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டெல்லி காவல் துறையினர், டெல்லியின் முன்னாள் காவல் துறை ஆணையரான, தற்போதைய பாண்டிச்சேரி பிரதேச லெப்டினன்ட் ஆளுநரான கிரண் பேடியை மீண்டும் டெல்லி ஆணையராக நியமிக்குமாறு முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP