அயோத்தியா வழக்கு தீர்ப்பு : என் முயற்சி தோல்வியடையவில்லை- அத்வானி பெருமிதம்!!

அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தனது போராட்டம் வெற்றி அடைந்துள்ளதை தொடர்ந்து தான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக கூறியுள்ளார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மிக முக்கிய தலைவரான எல்.கே.அத்வானி.
 | 

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் அயோத்தியா விவகாரத்தில், இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன்படி, சர்ச்சைக்குரிய அயோத்தியா நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் எனவும், அங்கு ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட்டு, 3 மாதத்திற்குள் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ள ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இஸ்லாமியர்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்கபட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 1990ஆம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.கே. அத்வானி இந்த அயோத்தியா வழக்கில் இந்துக்களுக்கு ஆதரவாக ராமர் கோவில் அமைப்பதற்கான பணிகள் தொடங்குமாறு கோரிக்கை விடுத்து, குஜராத் மாநிலத்தின் சோம்நாத்திலிருந்து அயோத்தியா வரை ரத யாத்திரை மேற்கொண்டிருந்தார். இவரின் இந்த உழைப்பிற்கு தற்போது பதில் கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் பாஜக தலைவரான எல்.கே.அத்வானி.

 உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒருதரப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது என்பது மிகவும் நிம்மதியளிப்பதாக கூறியுள்ள அத்வானி, இந்த தீர்ப்பினால் தான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து, இந்தியர்கள் அனைவரும் இனி விருப்பு வெறுப்புகள் என அனைத்தையும் விடுத்து ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP