Logo

அயோத்தியா வழக்கு தீர்ப்பு : மறுபரிசீலனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை - சன்னி வக்ஃப் வாரியம்!!

அயோத்தியா வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதனை முழு மனதுடன் ஏற்று கொள்வதாகவும் கூறியுள்ளார் அந்த வழக்கின் முக்கிய மனுதாரரான சன்னி வக்ஃப் வாரியம் தலைவர் சுஃபூர் ஃபரூக்கி.
 | 

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தg வந்த அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அயோத்தியாவின் சர்ச்சைக்குரிய அந்த நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், அதில் ராமர் கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ள தனி அறக்கட்டளை ஒன்றை அமைக்குமாறு கூறியுள்ள நீதிமன்றம், அதற்காக மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் மற்றொரு மனுதாரர்களான இஸ்லாமியர்களுக்கென்று வேறு ஓர் இடத்தில், தனியாக 5 ஏக்கர் நிலமும் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவிற்கு மரியாதை அளித்தாலும், முழு திருப்தியும் மனநிறைவும் இல்லாததால் இந்த வழக்கினை மறுபரிசீலனை செய்யக்கோரி மீண்டும் ஓர் மனு அளிக்கப்போவதாக குறிப்பிட்டிருந்தார் சன்னி வக்ஃப் வாரியத்தின் வழக்கறிஞர் சஃபர்யாம் ஜிலானி. 

இவரை தொடர்ந்து, பத்தரிகையாளர்களை சந்தித்த சன்னி வக்ஃப் வாரியத்தின் தலைவர் சுஃபூர் ஃபரூக்கி, மீண்டும் இந்த வழக்கினை மறுபரிசீலனை செய்யகோரி மேல் முறையீடு செய்யும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முழு மனதுடன் சம்மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP